Categories
Home Page

All Mails in One Page

Categories
Uncategorized

என்னவாயிற்று தமிழர்களுக்கு?

பணப்புழக்கம்.
ஏன் இங்கு இல்லை.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் ஏன் எது?

பல நன்பர்கள் மோடி தான் காரணம் என்று சொல்கிறார்கள். எல்லா தொழில்களிலும்.

தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை…. அதோடு சாராயம் மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன்அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன் வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்… விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான் அன்று புரியும்.

ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெயிலர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர் மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.

தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர் அவரிடம் பேசினோம் அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிருகிருத்தது,

.மாதம் மாதம் 10.000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்

வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவர் மாதம் 10.000.அனுப்புகிறார்

இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம்

நூறுபேர் அனுப்பினால் #ஒருகோடி

ஆயிரம் பேர் அனுப்பினால் #பத்துகோடி

ஒரு லட்சம் பேர் அனுப்பினால் #ஆயிரம்கோடி

மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன் தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு #திருப்பூரில்மூனுலட்சம் பேரும் #கோவையில்ஏழுலட்சம் பேரும் #சென்னையில்_20.பது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான்

சென்னை கோவை திருப்பூர் மட்டும் கனக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவர் மாதம் மாதம் 10.த்தாயிரம் என்றால் 30.லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்க்லேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது

மாதம் மாதம் 3.000.கோடி என்றால் வருடத்திற்கு 36.000.கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் #புழக்கத்தில் இருந்தால் அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய #இந்தப்பணம் #வடமாநிலங்களில் புலங்கிக் கொண்டுருக்கிறது அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டுருக்கிறது

இது வெரும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு மீதம் இருக்கும் 36 மாவட்டத் திலும். வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்

இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள் முதலாளிகள் போன்றோர்களை கனக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.

இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில் எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது அதனால் லட்சக்கணக்கான பொருட்கள் அதாவது உளி சுத்தியல் ஆரம்பித்து மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.

சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் அழிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது இதை தமிழன் எப்போது உணர்வது.?.

மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது,களை எடுத்தல், அறப்பு அருத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள் இனி என்னாகும் யோசியுங்கள்.

பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனக்கு எதிரான இந்தப் #பொருளாதாரப்போராட்டம் தொடர்ந்து நாம் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும் #தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்.?.

ந.தேவசேனாபதி. பதிவிலிருந்து.

வாழ்க தமிழ். தமிழ்நாடு. தமிழ் மக்கள்.

Categories
Uncategorized

ஆவின் பால் விலை அதிரடியாக எகிறியது- அதுவும் அதிர்ச்சி தரும் உயர்வு!

ஆவின் பால் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு வரும் திங்கள் (19-08-2019) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோருக்கு தரமான பால் விற்பனையை உறுதி செய்வதே அரசின் நோக்கம். இதையொட்டி விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4, எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பசும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.28ல் இருந்து, ரூ.32ஆக உயர்கிறது. 

மேலும் எருமைப் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.35ல் இருந்து, ரூ.41ஆக உயர்கிறது. இந்த விலை அதிகரிப்பு நாளை(ஆகஸ்ட் 19) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஏற்றத்தால் 4.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை. 

இதன் காரணமாக தற்போது அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளதைப் போன்று தோன்றுகிறது. ஆனால் விலைவாசி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டால், விலை உயர்வு பெரிதாக தெரியாது.

கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து பாலும் விற்பனை ஆவது இல்லை. எனவே குறிப்பிட்ட அளவு பால் பவுடராக மாற்றப்படுகிறது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படக்கூடும். 

இதை தவிர்க்கவே, கொள்முதல் விலையை விட விற்பனை விலை ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் தற்போது லாபத்தில் தான் இயங்கி வருகிறது. இந்த நிலை மாற வேண்டாம் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார். 

Categories
Uncategorized

குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)

1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம். வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள். தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்.

2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள். உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள். ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள். தன்னை திட்டுவதற்கும், சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்.

3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம். அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை. உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை. உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள். பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.

5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள். இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை.

6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று. நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்.

7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை. அது உங்கள் மகனின் கடமை. இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்.

8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும். இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள். நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள். உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம். இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல. அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

*குறிப்பு:*
இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல, உங்கள் நண்பர்கள், சொந்தங்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்…. எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்.

Categories
Uncategorized

திருநெல்வேலியம் அதன் சிறப்புகளும்…

திருநெல்வேலி, திருநவேலி என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்படும் இந்நகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம். தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் வயல்வெளிகளையே வேலியாக கொண்டதத்தால் இப்பெயர் பெற்றது. சரி வரலாற விட்டுட்டு நம் நெல்லை ஏன் ஸ்பெஷல்ங்கிறத பார்ப்போம்.

1. #நெல்லையின்_சிறப்புகள்
திருநெல்வேலி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் : திருநெல்வேலி , சங்கரன்கோவில் , தென்காசி , அம்பாசமுத்திரம் ஆகும். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.

பெயர் விளக்கம்:

16 ஆம் நுற்றாண்டு நுல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு ‘வேணுவனம்’ என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. ‘வேணு’ என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர் மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால் இந்த ஊரை ‘நெல்வேலி’ எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.

பெயர்க்காரணம் :

நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளிலேயே ‘திருநெல்வேலி’ என அழைக்கப்படுகிறது.

அமைப்பு :

இவ்வூரின் அமைவிடம் 8.73°N 77.7°நு ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இரட்டை நகரங்கள்:

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஒடுகின்றது.
பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும்
மக்கள்தொகை :

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி 30,72,880 பேர் உள்ளதாகவும், இதில் 15,18,595 ஆண்களும் 15,54,285 பெண்கள் உள்ளனர். இங்கு 82.9 சதவீதம் பேர் படித்தவர்கள்.

சிறப்புகள் :

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு :

சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பௌத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன.
மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம்.
வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழின் தோற்றம் :

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்று}ரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

அல்வா :

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சங்கரன்கோவில் பிரியாணி:

தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது.
இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.

பத்தமடை பாய் :

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூலித்தேவன் நினைவகம் :

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான்.
இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிறுவனங்கள் :

மாநகராட்சி -1, திருநெல்வேலி
நகராட்சிகள் 6
ஊராட்சி ஒன்றியம் 19
பேரூராட்சிகள் 39
சட்டசபை தொகுதிகள் :11

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
சேரன் மாதேவி
அம்பா சமுத்திரம்
தென்காசி
ஆலங்குளம்
வாசுதேவநல்லூர்
சங்கரன் கோவில்
இராதாபுரம்
நாங்குநேரி
கடையநல்லூர்

கல்வி :

பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 , நடுநிலை 411 , உயர்நிலை 90 , மேல்நிலை 129 , கல்லு}ரிகள் 14 உள்ளன.
தொழில் கல்வி நிறுவனங்கள்-3
அரசு மருத்துவக் கல்லு}ரி@ அரசு சித்த மருத்துவக் கல்லு}ரி
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7
தொழிற் நுட்பக் கல்லு}ரிகள் 5
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8

மருத்துவம் :

மருத்துவமனைகள்-10, மருந்தகம்-3, தொடக்க மருத்துவ நலநிலையம் 55, துணை தொ.ம.நலநிலையம்-385.

ஆற்றுவளம் :

மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.

தாமிரபரணி :

பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன் கலக்கிறது.
தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.

சிற்றாறு :

இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.

அணைகள் :

மணிமுத்தாறு அணை :

அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணைகள் :

பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம்.
மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்த நீர் 10 கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு குழாய் களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஸ்ரீமுகப்பேரி அணை :

தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

கடநா நதி (கருணை ஆறு)அணை :

சம்பங்குளத்தில் உள்ளது கடநா நதி அணை.

மலைவளம் :

திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.

அகத்தியமலை :

பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.

ஐந்தலை பொதிகை :

அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.

திருநெல்வேலியில் குறிப்பிடத்தக்கவர்கள் :

வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி), ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி), வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி).

ஆன்மிகத் தலங்கள் :

காந்திமதி நெல்லையப்பர் கோவில் :

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் “தாமிர சபை” என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்.
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

முப்பீட தலங்கள்:

அம்பாசமுத்திரம் – திருமூலநாதர் திருக்கோயில்
ஊர்காடு – திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
வல்லநாடு – திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

பஞ்ச ஆசன தலங்கள்:

ஏர்வாடி – திருவழுந்தீசர் திருக்கோயில்
களக்காடு – சத்யவாகீசர் திருக்கோயில்
நான்குநேரி – திருநாகேஷ்வரர் திருக்கோயில்
விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
செண்பகராமநல்லு}ர் – இராமலிங்கர் திருக்கோயில்

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்:

சங்கரன்கோவில் – சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் – மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லு}ர் – பால்வண்ணநாதர் – அக்னி தலம்
தாருகாபுரம் – நீர் தலம்
தென்மலை- காற்று தலம்
தேவதானம் – ஆகாய தலம் (இது தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது)

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:

சிவசைலம் – சிவசைலப்பர் திருக்கோயில்
ஆழ்வார்குறிச்சி – வன்னீஸ்வரர் திருக்கோயில்
கடையம் – வில்வவனநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் – நாறும்பூநாதர் திருக்கோயில்
பாபநாசம் – பாபநாசர் திருக்கோயில்

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:

களக்காடு- சத்யவாகீசர்
பத்தை – குலசேகரநாதம்
பத்மனேரி – நெல்லையப்பர்
தேவநல்லு}ர் – சோமநாதம்
சிங்கிகுளம் – கைலாசநாதம்

நவ சமுத்திர தலங்கள் :

அம்பாசமுத்திரம்
ரவணசமுத்திரம்
வீராசமுத்திரம்
அரங்கசமுத்திரம்
தளபதிசமுத்திரம்
வாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம்
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

பஞ்ச பீட தலங்கள் :

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
கூர்ம பீடம் – பிரம்மதேசம்
சக்ர பீடம் – குற்றாலம்
பத்ம பீடம் – தென்காசி
காந்தி பீடம் – திருநெல்வேலி
குமரி பீடம் – கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

காட்டு வளம் :

காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன.
மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் ‘ஸ்லீப்பர்’ கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.
நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு.
செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள் :

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன.
சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன.
புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம்.
தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன.
எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

பறவைகள் :

மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன.
சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன.
பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது.
உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

நிலவளம் :

திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள்.
மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை ‘தேரிக் காடுகள்’ என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.

தருவைகள் :

பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் ‘தருவை’கள் என்று அழைக்கின்றனர்.

கனிமங்கள் :

சுண்ணாம்புக்கல் :

சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.

கார்னர்டு மணல் :

உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.

அல்லனைட் :

அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

மோனசைட் :

இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.

மைக்கா :

நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.

கிராபைட் :

உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.

வேளாண்மை :

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன் கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம் மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது.
19-ஆம்நு}ற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுவடி செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன் கோயில் நாங்கு நேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங் களிலும் இங்குக் கிடைக்கின்றன.
இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி.

பணப்பயிர்கள் :

1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன.
1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன.
1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.

சுற்றுலாத் தலங்கள் :

இம்மாவட்டத்தில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக கீழேகண்ட இடங்களைக் குறிப்பிடலாம் :-
அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி இ) குற்றாலம்

பாபநாசம் நீர்வீழ்ச்சி :

அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி :

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம்.
பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.

குற்றாலம் :

திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும்.
இவ்வுரைச் சிறப்பித்து ‘குற்றால குறவஞ்சி’ என்ற இலக்கியம் எழுந்துள்ளது.
குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நு}று அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி :

தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று

ஐந்தருவி :

சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும்.

முண்டந்துறை புலிகள் புகலிடம் :

திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம் :

திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம்.
இங்கு பலவகையான தாவரங்களும், புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன.
இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் :
மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை@ இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.

தாமிரபரணி :

திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன் பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தண்ணியோட ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம் வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம்.

திருநெல்வேலி அல்வா :

இருட்டுக்கடை , திருநெல்வேலி
திருநெல்வேலிக்கு பெருமை சேக்குற இன்னொரு விஷயம் அல்வா. உலகத்துல எத்தனையோ வகையில அல்வா இருக்கலாம். ஆனா திருநெல்வேலி அல்வா எல்லாத்தையும் தூக்கி சாப்ட்ரும். அதே போல திருநெல்வேலிலயும் எத்தனையோ அல்வா கடைகள் இருக்குது. ஆனா நெல்லையப்பர் கோவில் வாசல்ல இருக்குற இருட்டுக்கடை அல்வா கடைக்கு இருக்குற மவுசு யாருக்கும் இல்லை. அந்த கடைல நூறு அல்வாவை வாங்கி நெல்லையப்பர் கோபுரத்தை பாத்துக்கிட்டே சாப்பிடும் சுகமே தனி…!

#திருநெல்வேலி தமிழ் :

தமிழகத்தில் பல வட்டார வழக்குகள் புழக்கத்தில் இருக்கின்றன. மதுரை, கோவை, சென்னை, குமரி என்று பல பகுதி மக்களால் அவைகள் பேசப்படுகின்றன. அவைகளை விட நெல்லை, தூத்துக்குடி வட்டார பகுதிகளில் புழங்கும் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. அண்ணாச்சி, மக்கா, தொடங்கி ஏல போன்ற சொற்கள் நெல்லை தமிழை முல்லைத் தமிழாக்குகின்றன. நெல்லைத்தமிழ் பேசுவோரின் வார்த்தைகளிலும், குணத்திலும் அன்பும் வீரமும் பொங்கி வழிவதை காண முடியும்.

#OXFORD நகரம்:

நெல்லை பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ‘OXFORD’ என்று புகழப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கியது இந்நகரம். இன்றும் சாலை தோறும் கல்விச்சாலைகளை இங்கு காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி கல்லூரிகள் இருப்பது இயல்பு. அனால் பள்ளி கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான்,..!

#சுற்றுலா:

#குற்றாலம்.
நெல்லை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், திருநெல்வேலி யில் இருந்து எந்த திசையில் சென்றாலும் வெறும் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சுற்றுலா தளம் வந்துவிடும். உதாரணத்திற்கு ,
கிழக்கே – திருச்செந்தூர் .
மேற்கே – பாபநாசம்,குற்றாலம்.
தெற்கே – கன்னியாகுமரி (89 km).
வடக்கே – கழுகுமலை.
இப்படி சுற்றி சுற்றி சுற்றுலா தலங்களை கொண்டதாக விளங்குகிறது நெல்லை மாவட்டம்.

#ஆன்மீக தலங்கள் :

குறுக்குத்துறை
புண்ணிய நதி தாமிரபரணி பாயும் பூமி ஆதலால் புண்ணிய தலங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் பஞ்சமில்லை. நவ கைலாச கோவில்கள் நெல்லை மாவட்ட தாமிரபரணி கரையோரம் வரிசையாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், தொன்மையான கிருஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என்று ஆன்மீக மனம் நெல்லை பிராந்தியம் முழுவதும் வீசிக்கொன்டே இருக்கிறது…..

Categories
Uncategorized

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு -30/05/2019

*மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு*மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு*

30-05-2019

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு…

உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமனம்.

நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் – கார்ப்பரேட் விவகாரங்களையும் கவனிப்பார்.

ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமனம்.

வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ் ஜெயசங்கர் நியமனம்.

ரயில்வே துறை மீண்டும் பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு – தொழில் மற்றும் வர்த்தகத்துறையும் ஒதுக்கீடு.

நிதின் கட்கரிக்கு தரைவழிப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை ஒதுக்கீடு.

சதானந்த கவுடா உரத்துறை அமைச்சராக நியமனம்.

உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் நியமனம்.

நரேந்திர சிங் தோமர் விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமனம்.

சட்டத்துறை மற்றும் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் நியமனம்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி நியமனம்.

உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் பாதல் மீண்டும் நியமனம்.

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம் – சுற்றுச் சூழல் துறையையும் கவனிப்பார்.

பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமனம்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்.

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை அமைச்சராக தவார் சந்த் கெலாட் நியமனம்.

ரமேஷ் பொக்ரியால் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம்.

பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக அர்ஜூன் முண்டா நியமனம்.

சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்சவர்தன் நியமனம்.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மகேந்திரநாத் பாண்டேவுக்கு ஒதுக்கீடு.

கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமனம்.

பிரதமர் அலுவலகங்களுக்கான இணை அமைச்சராக (தனி பொறுப்பு) ஜிதேந்திரா சிங் நியமனம்.

தனிப் பொறுப்புடன் கூடிய விளையாட்டுத்துறை இணை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமனம்.

தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சராக பிரஹலாத் சிங் படேல் நியமனம்.

தனிப் பொறுப்புடன் கூடிய மின்சாரத்துறை இணை அமைச்சராக ஆர்.கே.சிங் நியமனம்.

தனிப்பொறுப்புடன் கூடிய கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமனம்.

தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக வி.கே.சிங் நியமனம்.

வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக வி முரளிதரன் நியமனம்.

Categories
Cooking Videos

Aachi Nxt Gen Cooking – How to make Sambar Quick and Easy (In Tamil)

Aachi Nxt Gen Cooking

Welcome to the simplest cooking channel! There is something for everyone who visits us! Aachi has introduced the Nxt Gen Cooking, where you can find simple and easy cooking tips and cook delicious, healthy, and yummy recipes instantly! Subscribe our YouTube Channel to get different unique recipes daily!

Shop our products at https://www.aachifoods.com Use Deal Code - ANGC1 and avail 20% Flat Discount on all our Products. Hurry... Limited Offer.

Don't settle with the usual sambar! Aachi Masala brings you an amazingly flavored, delicious and traditional sambar recipe that will make your lunchtime holistically joyful! Watch our video to make unique tasting sambar recipe !!

===============================

Subscribe : https://tinyurl.com/y57wcujo

Shop our products at https://www.aachifoods.com

Use Deal Code - ANGC1 and avail 20% Flat Discount on all our Products.

Hurry... Limited Offer.

#Sambar #MurungakkaiSambar #HowtoPrepareSambar #Aachimasala #AachiNXTGENCooking #recipe #knowledge #tasty #healthy #homemade #vegetarian #yummy #method #suvai #NXTGEN #cooking #traditional #homefood #heartfelt #masalas #readymix #easytocook

==========================

Follow Aachi NXTGEN Cooking on Social Media Facebook : https://www.facebook.com/Aachinxtgen

Instagram : https://www.instagram.com/aachi_nxtge...

Twitter : https://twitter.com/Aachi_NxtGen

===========================

Ingredients: Aachi Sambhar Powder - 100g, Red Lentils or Toor dhal - 200g, Tamarind Half tsp, mustard Oil - 2 tbsp, Onion - 1 no, Tomatoes - 2 nos, Green chilli and curry leaves, Coriander leaves, 100g cut vegetables and Salt.

===========================

Recipe: Firstly, take the rinsed red lentils in a pressure cooker Then add 800ml of water to it Pressure cook the dhal for 4 to 5 whistles Now cut one drumstick into pieces and cut 2 fresh brinjals Chop 1 medium sized onion Cut 2 medium sized tomato Now keep a pan in the stove and add 2 tbsp of oil Add 1/2 tsp mustard seeds Once the mustard seeds are fried, add chopped onions and fry till golden brown color Then add 2 green chillies to it Add few curry leaves and saute for just a minute Then add the cut drumstick and brinjals to the mixture and saute for a minute Then add the tomatoes The close the lid and allow the vegetables to cook for about 4 minutes in a medium flame Now add tamarind juice Add 1 1/2 tbsp of Aachi Sambhar powder to the mixture Immediately add sufficient amount of salt Then add the cooked dhal and stir well Then cook up to 15 minutes Once the sambhar is boiled well add some coriander leaves, now your sambhar is ready to serve. You can use this sambhar with plain rice, dhosa, idly, poori, chappathi and so on.

Categories
Uncategorized

Sai Digital and Signs – 99400 51214

We makes all types of Signage boards and Printing works.. LED Sign Board,
Glow Sign Board,
Sticker Sign Board,
Flex Sign Board,
Acrylic Sign Boards,
ACP Elevation Works,
Inshop Brandings,
Traffic Sign Boards,
Digital Banner & Vinyl Printings,
Multi color Offset printing works,
All types of Display items,
Roll up Standy & Umbrella wt Printed,
No parking Boards,
Road Side Wooden Sign Boards, & etc…

Address: 2/223, Sidharthar Nagar 2nd Street, Nanmangalam, Chennai -117
(Landmark : Perumal Provision Stores)

https://maps.app.goo.gl/fuFba1nJ4vuQ96PNA

Vasavi Super Market – Medavakkam – LED Board
Back light Sticker Board
Back Light Sticker Board

Back Light Sticker Board
Mithun Child Clinic – LED Board
Back Light Board
LED Board
Back Light – Sticker Board
LED Sign Board
Sticker Back light Board
Back Light Board
LED Sign Board
Back Light Sticker Board
Flex Wall
Vinyl Printing on Foam Board – Pasted on Wall (Wall Branding)
Sun Pack Boards
LED Sign Boards
Rollup – Standee
Back Light – Sticker Board

Back Light – Sticker Board
Reflective Sign Board
LED Sign Board
LED – Sign Board
Back Light Board
Glass Branding
Sticker Back Light Board

Back Light Sticker Board

LED Sign Board,
Glow Sign Board,
Sticker Sign Board,
Flex Sign Board,
Acrylic Sign Boards,
ACP Elevation Works,
Inshop Brandings,
Traffic Sign Boards,
Digital Banner & Vinyl Printings,
Multi color Offset printing works,
All types of Display items,
Roll up Standy & Umbrella wt Printed,
No parking Boards,
Road Side Wooden Sign Boards, & etc…

LED Sign Board,
Glow Sign Board,
Sticker Sign Board,
Flex Sign Board,
Acrylic Sign Boards,
ACP Elevation Works,
Inshop Brandings,
Traffic Sign Boards,
Digital Banner & Vinyl Printings,
Multi color Offset printing works,
All types of Display items,
Roll up Standy & Umbrella wt Printed,
No parking Boards,
Road Side Wooden Sign Boards, & etc…